Vimarsagan Media

Home » World » 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சுமார் 4.7 மில்லியன் கணக்குகளை டிக்டாக்மற்றும் யூடியூப் முடக்கம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சுமார் 4.7 மில்லியன் கணக்குகளை டிக்டாக்மற்றும் யூடியூப் முடக்கம்

இந்தோனேசியாவில் சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சுமார் 4.7 மில்லியன் கணக்குகளை டிக்டாக் (TikTok) மற்றும் யூடியூப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்கள் முடக்கியுள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’ (ByteDance) உருவாக்கிய டிக்டாக் 4.1 மில்லியன் கணக்குகளையும், ‘ஆல்பாபெட்’ (Alphabet) நிறுவனத்தின் கூகுளுக்குச் சொந்தமான வீடியோ தளமான யூடியூப் 600,000 கணக்கு களையும் முடக்கியுள்ளன என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மியூத்யா ஹாஃபிட் (Meutya Hafid) வியாழக்கிழமை இரவு தெரிவித்தார்; மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

• இது குறித்த கருத்து கோரப்பட்டதற்கு இரு நிறுவனங்களும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

• அதிக ஆபத்துடையதாகக் கருதப்படும் தளங்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று இந்தோனேசியா மார்ச் மாதத்தில் ஒரு விதிமுறையை வெளியிட்டது; இதில் இதுவரை ‘எக்ஸ்’ (X), மெட்டாவின் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) மற்றும் வீடியோ கேம் தளமான ‘ரோப்லாக்ஸ்’ ஆகியவை அடங்கும்.

• “நாங்கள் குழந்தைகளின் அணுகலைத் தள்ளிப்போடுவது மட்டுமல்லாமல், சமூக ஊடகத் தளங்களின் செயல்பாட்டு முறைகளும் மாற வேண்டும் என்று விரும்புகிறோம்,” என்று கூறிய மியூத்யா, அந்நிறுவனங்கள் சமர்ப்பித்த சுய மதிப்பீட்டு அறிக்கைகளை அமைச்சகம் தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Scroll to Top