Vimarsagan Media

Home » Entertainment » 38 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷன் இயக்கியுள்ள விளம்பர படத்தில் நடித்துள்ளார் நடிகை லிசி.

38 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷன் இயக்கியுள்ள விளம்பர படத்தில் நடித்துள்ளார் நடிகை லிசி.

38 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ’சித்ரம்’ படத்தில் லிசியை இயக்கியிருந்தார் பிரியதர்ஷன். அதற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்தும் பெற்றனர்.

இவர்களுக்கு கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது 38 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள விளம்பர படத்தில் லிசி நடித்துள்ளார். பிரபு, கல்யாணி பிரியதர்ஷன் இருவருடன் லிசி நடித்துள்ளார். நிஜத்தில் மட்டுமன்றி திரையிலும் கல்யாணிக்கு அம்மாவாக லிசி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் விளம்பர படத்தில் நடித்திருப்பது குறித்து லிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்குப் பின்பு திரையில் லிசி தோன்றவுள்ளது நினைவுக் கூரத்தக்கது. பிரியதர்ஷன் – லிசி இருவருமே விவகாரத்துக்கு பின்பும் கூட சமீபத்தில் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் பிரியதர்ஷன் உறுதிப்படுத்தியிருந்தார்

Scroll to Top