Vimarsagan Media

Home » Malaysia » தார் காலேஜ்-க்கான 3 ஆண்டு இடைக்கால வரி விலக்கு குறித்து அரசின் விளக்கம் .

தார் காலேஜ்-க்கான 3 ஆண்டு இடைக்கால வரி விலக்கு குறித்து அரசின் விளக்கம் .

துங்கு அப்துல் ரஹ்மான் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு (TAR UMT) உடனடியாக 10 ஆண்டுகளுக்கான வருமான வரி விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, இடைக்காலமாக மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் வரி விலக்கு அளிப்பதற்கான தனது முடிவை நிதியமைச்சு விளக்கிக் கூறியுள்ளது.

TAR UMT-ஐ நிர்வகித்து வரும் இலாப நோக்கற்ற அமைப்பான ‘TARC கல்வி அறக்கட்டளைக்கு’ (TARC Education Foundation) 10 ஆண்டுகளுக்கான வரி விலக்கு அளிக்கப்படுவது, 1967-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று அமைச்சு தெரிவித்தது.

குறிப்பாக, TARC தனது நிர்வாகக் கட்ட மைப்பை வலுப்படுத்தவும், நன்கொடை களை நிர்வகிக்கும் முறையை மேம்படுத் தவும் வேண்டியிருந்தது என்று அது குறிப்பிட்டது.

“கல்வித் துறையில் TARC வகிக்கும் முக்கிய பங்கை கருத்தில் கொண்டு, வருமான வரி விலக்கை இடைக்காலமாக மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விவேகமான அணுகுமுறையை அரசாங்கம் மேற்கொண்டது.

“தேவையான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை களை TARC மேற்கொள்ளும் அதே வேளையில், அதன் வரி விலக்கு அந்தஸ்து தொடர்வதை இது உறுதி செய்கிறது. TARC-இன் முயற்சிகளுக்கு உதவ நிதியமைச்சு தயாராக உள்ளது.

“அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், அரசாங்கம் அறிவித் தபடி TARC 10 ஆண்டுகளுக்கான வருமான வரி விலக்கைப் பெறத் தகுதி பெறும்,” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

TARC-க்கு ஆதரவளிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தாலும், வரி விலக்கு ஒப்புதல்கள் சட்டப்பூர்வ நிபந்தனை களைப் பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தை அரசியலாக்கவோ அல்லது தவறாகச் சித்தரிக்கவோ கூடாது என்று கருவூலம் (Treasury) கூறியது.

அடுத்த பத்தாண்டுகளுக்கு அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வரி விலக்கு அளிக்கும் கொள்கையின் ஒரு பகுதி யாக, TAR UMT-க்கு 10 ஆண்டுகளுக்கான வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.

இந்த வரி விலக்கு இல்லையென்றால், அப்பல்கலைக்கழகம் ஆண்டுக்கு 20 மில்லியன் ரிங்கிட் வரை வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்; இது ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பாதித்திருக்கக்கூடும்.

நேற்று, MCA தலைவர் வீ கா சியோங் (Wee Ka Siong), TAR UMT-க்கு வழங்கப்பட்ட வரி விலக்கு காலம், வாக்குறுதி அளிக்கப்பட்ட 10 ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப் பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்

Scroll to Top