Vimarsagan Media

Home » Malaysia » பெல்டா குடியேறிகளைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்ப்பதை விரைவுபடுத்த பிரதமர் வலியுறுத்து

பெல்டா குடியேறிகளைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்ப்பதை விரைவுபடுத்த பிரதமர் வலியுறுத்து

பெல்டா குடியேறிகளைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை, குறிப்பாக இரண்டாம் தலைமுறையினருக்கான வீட்டுவசதி மற்றும் நில உரிமை தொடர் பான பிரச்சினைகளைத் தீர்ப்பதை விரைவுபடுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

விரைவான நடவடிக்கைகள் மற்றும் தெளிவான தீர்வுகள் மூலம் பெல்டா சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க அந்த அமைப்பு தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்வார் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“குடியேறிகளுக்கு நீண்டகாலமாகச் சுமையாக இருக்கும் பிரச்சினைகளை, குறிப்பாக இரண்டாம் தலைமுறை யினருக்கான வீட்டுவசதி மற்றும் நில உரிமை தொடர்பானவற்றைத் தீர்க்க FELDA தனது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.

“இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு பிரச்சினையையும் கவனமாக ஆய்வு செய்து, தெளிவான தீர்வுத் திட்டத்தை வகுப்பதன் மூலம், பெல்டா குடியேறிகளின் நலன்களுக்கு முன் னுரிமை அளிக்கும் உடனடி நடவடிக்கை களை நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பெல்டாவை வலுப்படுத்துவதிலும், மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சி களும் குடியேறிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உறுதியான பலன்களை அளிப்பதை உறுதி செய் வதிலும் அரசாங்கத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.

பெல்டீ-வின் இரண்டாம் தலைமுறையினருக்கான வீட்டுமனை தொடர்பான நீண்டகாலப் பிரச்சினை யைத் தீர்க்க அரசாங்கம் செயல்படும் என்று குடியேறிகளுக்கு அவர் உறுதியளித்த மறுநாளே அவரது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், நிலம் தொடர்பான விவகாரங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் ஆகியவை மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்குள் வருவதால், முன்னேற்றம் காண்பதற்கு மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top