இந்தோனேஷியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரமபனன் கோவிலை(சிவன் கோவில்) புனரமைக்கும் பணிக்கு இந்தியா உதவி செய்ய உள்ளது. இதற்கான பணியை நாளை பிரதமர் மோடியும் இந்தோனேஷியா அதிபரும் நாளை துவக்கி வைக்க உள்ளனர்.
இந்தோனேஷியாவின் தெற்கு ஜாவாவில் உள்ள யோககர்த்தா நகரில் இருந்து 17 கி.மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்தி களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இந்தோனேஷியாவின் மிகப்பெரிய ஹிந்து கோவிலாகவும், கம்போடியாவின் அங்கோர் வாட்க்கு பிறகு ஆசியாவி லேயே இரண்டாவது பெரிய கோவில் ஆகும்.
இங்கு 240 கோயில்கள் அமைந்துள்ளன. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோவிலின் மைய விமானம் 154 அடி உயரத்தில் உள்ளது. முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட இக்கோவில் வடக்கு பகுதியில் பிரம்மாவு க்கும், தெற்கு பகுதியில் விஷ்ணுவுக்கும் கோவில் உள்ளது.பழமையானதும், உயரமானதுமாக சிவன் கோவில் உள்ளது. இதன்சுற்று பிராகரத்தில் ராமாயண காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன.யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.- தினமலர்




