Vimarsagan Media

Home » World » சீனாவில் பயங்கர நிலச்சரிவு: பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல்

சீனாவில் பயங்கர நிலச்சரிவு: பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல்

நிலச்சரிவினால் மலைச்சரிவின் கீழ் பகுதியில் இருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து சாலைகள் மூடப்பட்ட நிலையில், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து நொறுங்கியுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சுமார் 100 மீட்புக்குழு வினரும் 200 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை என கூறப்படு கிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்லனர்.

அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டதற்கான உடனடி காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Scroll to Top