Vimarsagan Media

Home » India » 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைத் துறையுலகம்:-முதல்வர் வாழ்த்து

10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைத் துறையுலகம்:-முதல்வர் வாழ்த்து

சென்னை: 2024-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும்,

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த தனுஷுக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும்,

‘அமரன்’ திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக் கான விருது, ஆர்.கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘மகாராஜா’ திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸுக்கு சிறந்த துணை நடிகை விருதும், ‘மெய்யழகன்’ திரைப்படத்திற் காக சுரேன் ஜிக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், ‘ப்ளூ’ குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹர சுதனுக்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top