Vimarsagan Media

Home » World » ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி

ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மை யற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஜ்தபா கமேனி நேற்று (18) சனிக்கிழமை வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோர்தானை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்! பலியாகிய அமெரிக்க வீரர்கள் போர்நிறுத்த உடன்படிக்கை

அத்துடன் ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளிடமிருந்து அமெரிக்கா மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக்கொள்ளும் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரித்துள்ளார்.

Scroll to Top