அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் சையட் சாடிக் (Syed Saddiq) விடுவிக்கப் பட்டுள்ள நிலையில், அவரும் பெல்லா அஸ்டில்லாவும் (Bella Astillah) தங்கள் திருமணத்திற்கான தேதியை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பாடகி பெல்லாவுடன் இணைந்து தான் நடத்திய முதல் பாட்காஸ்ட் (podcast) நிகழ்ச்சியில், திருமணத் தேதி குறித்து இருவரும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ள தாக முவார் (Muar) நாடாளுமன்ற உறுப்பினரான சையட் சாடிக் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
“இது எங்களுக்குள் மட்டும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல; எங்கள் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறந்தவர்களுடனும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் நடைமுறையை மதிக்கும் விதமாகவே, நாங்கள் இப்போதே அந்தத் தேதியை வெளிப்படையாக அறிவிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
மறுபுறம், தங்கள் திருமணத்தை ஒளிபரப்புவதற்கான உரிமையை ‘ஆஸ்ட்ரோ’ (Astro) நிறுவனத்திற்கு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக பெல்லா தெரிவித்தார்.
“எங்கள் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமை ஆஸ்ட்ரோவிடம் இருப்பது பலருக்கும் தெரியாது. எனவே, இது குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் ஆஸ்ட்ரோ வாயிலாகத் தெரிந்துகொள்ள லாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளாக ஒருவரை யொருவர் அறிந்திருந்த சையத் சாடிக் மற்றும் பெல்லா அஸ்டில்லா ஆகியோருக்கு இடையே இந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சையட் சாடிக்கின் முதல் திருமணமாகும்; பாடகரும் நடிகருமான அலிஃப் அஜிஸுடனான முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளைக் கொண்ட பெல்லாவிற்கு இது இரண்டாவது திருமணமாகும்.




