காட்ஸில்லா வெர்சஸ் காங்’ (Godzilla vs. Kong) மற்றும் ‘காட்ஸில்லா எக்ஸ் காங்’ (Godzilla X Kong) திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற இளம் நடிகை கேலி ஹாட்டல் (Kaylee Hottle), அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் நடந்த கார் விபத்தில் 18 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. அதிக வேகம் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.பாதிப்பு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்ட கேலி ஹாட்டல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
காரை ஓட்டிய ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார்.செய்தி அறிவிப்பு: டெக்சாஸ் மாகாணத்தில் இருந்த அவரது தந்தை ஜோசுவா ஹாட்டல், அமெரிக்க சைகை மொழியில் (ASL) முகநூல் நேரலையில் (Facebook Live) அழுதபடி தனது மகளின் மறைவுச் செய்தியை வெளியிட்டார்
.திரைப்படப் பயணம்:காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், ‘காட்ஸில்லா’ படங்களில் ‘ஜியா’ (Jia) என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.திரைப்படங்களில் இவர் கிங் காங்குடன் சைகை மொழியில் தொடர்பு கொள்ளும் விதம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.2024 ஆம் ஆண்டில் வெளியான ‘காட்ஸில்லா எக்ஸ் காங்: தி நியூ எம்பயர்’ திரைப்படத் தில் நடித்ததற்காகச் சிறந்த இளம் நடிகைக்கான ‘சாட்டர்ன் விருது’ (Saturn Award) பரிந்துரையைப் பெற்றார்.
இந்த இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் ஒரு முக்கிய அடையாளத்தை உருவாக் கிய கேலி ஹாட்டில் மறைவு, திரை யுலகினரையும் அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




