நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பல்வேறு இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த போதிலும், இந்த நிலை ஏற்பட்டதாக கோலா திரெங்கானு மேயர் லிசான் சே மமாட் தெரிவித்தார்.
கோலா நெருஸ் (Kuala Nerus) அருகே உள்ள கோங் படாக் (Gong Badak) மோட்டார் பந்தயச் சுற்றுப்பாதையில் நடைபெற்ற ‘RXZ Members 8.0’ நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து சுமார் 130 டன் கழிவுகள் – முக்கியமாக உணவு மற்றும் பானங்களின் உறைகள் – சேகரிக்கப் பட்டன.
பெட்டாலிங் ஜெயா: கோலா நெருஸ் அருகே உள்ள கோங் படாக் மோட்டார் பந்தயச் சுற்றுப்பாதையில் நடைபெற்ற ‘RXZ Members 8.0’ நிகழ்ச்சிக்குப் பிறகு, அங்குள்ள கழிவுகளை அகற்றும் பணிக்காக கோலா திரெங்கானு மாநகர மன்றம் RM40,000 செலவிட்டது.
வெள்ளி முதல் சனிக்கிழமை வரை அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக பெர்னாமா (Bernama) செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பணியாளர்களுக்கான கூடுதல் நேர ஊதியம், கூடுதல் லாரி பயணங்கள் மற்றும் சுங்கை இக்கான் (Sungai Ikan) குப்பை கொட்டும் தளத்தின் நீட்டிக்கப்பட்ட செயல்பாட்டு நேரம் ஆகியவற்றுக்கு இந்தச் செலவு பயன்பட்டதாக கோலா திரெங்கானு மேயர் லிசான் சே மமாட் கூறினார்.
குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், பங்கேற்பாளர்கள் கண்ட இடங்களில் குப்பைகளை வீசியதாக அவர் குறிப்பிட்டார். “நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து சுமார் 130 டன் திடக் கழிவுகள், முக்கியமாக உணவு மற்றும் பானங்களின் உறைகள் சேகரிக்கப்பட்டன.
“வருகையாளர்கள் எண்ணிக்கை 1,00,000-க்கும் அதிகமாக இருந்ததால், குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாமல் இருந்திருக்கலாம். இருப்பினும், குப்பைகளை எல்லா இடங்களிலும் வீசுவதற்குப் பதிலாக, அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உய்யோகித்திருக்கலாம்,” என்று அவர் கூறினார்.




