இங்குள்ள பாரிட் ராஜாவில் உள்ள சுங்கை தஞ்சோங் செம்ப்ரோங் (Sungai Tanjung Sembrong) ஆற்றில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று மிதந்த நிலையில் கண்டெடுக் கப்பட்டது.
உப்பிய நிலையில் இருந்த அந்த நபரின் சடலம், ஒரு வலையில் சுற்றப்பட்டிருந் ததாகத் தெரியவந்துள்ளது. இது குறித்துத் தொடர்பு கொண்டபோது, சடலம் கண்டெடுக்கப்பட்டதை மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் ஷாருல்னுவார் முஷதாத் அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பான அறிக்கை ஜொகூர் மாநிலக் காவல் தலைமையகத்தால் வெளியிடப்படும் என்று அவர் கூறினார் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, வலையில் சுற்றப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலானது.
ஆரம்பத்தில் கால்நடை ஒன்றின் சடலம் என்று தவறாக நினைத்த அப்பகுதி மக்கள், பின்னர் காவல்துறையைத் தொடர்பு கொண்டபோதுதான் அது மனித சடலம் என்பது தெரியவந்தது




