Vimarsagan Media

Home » India » இங்க ஒன்னு நினைச்சா பத்து நடக்கும் அதிரடி பஞ்ச்!பிக் பாஸ் தமிழ் சீசன் 10:

இங்க ஒன்னு நினைச்சா பத்து நடக்கும் அதிரடி பஞ்ச்!பிக் பாஸ் தமிழ் சீசன் 10:

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ப்ரோமோ அதிகாரப் பூர்வமாக வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தமிழ் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, ‘கார்னி விழா’ என்ற புதிய தீமுடன் லோகோ வடிவமைக்கப் பட்டுள்ளது.

நூறு நாள் திருவிழா – கார்னி விழா கொண்டாட்டம்! இந்த 10-வது சீசன் வெறும் போட்டியாக மட்டுமில்லாமல், ஊரே சேர்ந்து கொண்டாடும் நூறு நாள் திருவிழாவாக அமையவுள்ளது. வண்ணமயமான செட்டிங்குகள், மக்கள் கொண்டாடும் பாடல் வரிகள் ஆகிய வற்றுடன் இந்த சீசன் தொடங்குகிறது.

“மக்கள் அனைவருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லா சீசனும் கெத்து.. இப்போ இது சீசன் பத்து” என்ற வரிகள் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10 ஆண்டுகால வெற்றிகரமான பயணம் இந்த ப்ரோமோவில் பெருமையோடு நினைவுகூரப்பட்டுள்ளது.

“இங்க ஒன்னு நினைச்சா பத்து நடக்கும்” – விஜய் சேதுபதியின் அதிரடி பஞ்ச்! கடந்த சீசனைப் போலவே, இந்த மைல்கல் பத்தாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான அவதாரத்தில் தொகுத்து வழங்குகிறார்.

ப்ரோமோவின் இறுதிக் காட்சியில், ஒரு அசத்தலான திருவிழா பின்னணியில் கூலிங் கிளாஸ் அணிந்து மாஸாகத் தோன்றும் அவர், “இங்க ஒன்னு நினைச்சா… பத்து நடக்கும்” என்ற அதிரடி பஞ்ச் லைனைப் பேசி, இந்த சீசனில் வரப்போகும் பல நூதனமான ட்விஸ்டுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

Scroll to Top