வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் தீவிர ஆதரவாளரான 28 வயதான கரோலின் லீவிட், ட்ரம்பின் கொள்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது ஊடகவியலாளர்களுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடும் ஒரு நபராக அறியப்படுகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகினாலும், கரோலின் தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் மிக இளவயது வெள்ளை மாளிகை செய்தித் தொடர் பாளர் என்ற பெருமையைப் பெற்ற இவர், கடந்த மே மாதம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததன் மூலம் தற்போது இரண்டு குழந்தைகளின் தாயாக உள்ளார்.
இதன்படி, தனிப்பட்ட காரணங்களுக் காகவே தான் பதவி விலகுவதாகவும் கரோலின் கூறியுள்ளபோதிலும், டிரம்பின் சரிந்து வரும் செல்வாக்கே இந்த பதவி விலகலுக்கு முக்கியக் காரணம் என அனைத்துலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் தீவிர ஆதரவாளரான 28 வயதான கரோலின் லீவிட், ட்ரம்பின் கொள்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது ஊடகவியலாளர்களுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபடும் ஒரு நபராக அறியப்படுகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகினாலும், கரோலின் தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் மிக இளவயது வெள்ளை மாளிகை செய்தித் தொடர் பாளர் என்ற பெருமையைப் பெற்ற இவர், கடந்த மே மாதம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததன் மூலம் தற்போது இரண்டு குழந்தைகளின் தாயாக உள்ளார்.
இதன்படி, தனிப்பட்ட காரணங்களுக் காகவே தான் பதவி விலகுவதாகவும் கரோலின் கூறியுள்ளபோதிலும், டிரம்பின் சரிந்து வரும் செல்வாக்கே இந்த பதவி விலகலுக்கு முக்கியக் காரணம் என அனைத்துலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.