மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் நடைபெறும் விசாரணை க்கு உதவ, உள்ளூர் பெண் ஒருவரைத் தேடி வருகிறது.
அந்தப் பெண் ‘வோங் பூய் லிங்’ (Wong Pooi Ling – வயது 51) என்று ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
“அவரது கடைசி முகவரியான ‘எண் 303, பிளாக் ஜலான் முஹிப்பாஹ் 18, taman முஹிப்பாஹ், 43330 செரி கெம்பாங்கன், சிலாங்கூர்’ (No. 303, Block Jalan Muhibbah 18, Taman Muhibbah, 43330 Seri Kembangan, Selangor) என்ற இடத்தில் அவரைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போதிலும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோங் குறித்த தகவல் தெரிந்த பொது மக்கள், விசாரணை அதிகாரி முஹம்மது மிக்கேல் அப்துல்லாவை (Muhammad Mikael Abdullah) 012-3316521 என்ற எண்ணிலோ, அல்லது சிலாங்கூர் MACC அலுவலகத்தை 03-5525600 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; அல்லது gunashilen@sprm.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம்.




