மலேசியா சுதந்திரம் அடைந்து ஏறக்கு றைய 70 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக இன ரீதியான விவகாரங்களைப் பயன்படுத்து வதையும், பரஸ்பர மோதல்களில் ஈடுபடுவதையும் அனைத்துத் தரப்பினரும் நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அரசியலில் இத்தகைய சூழல்கள் ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிட்ட அன்வார், குறிப்பாக அரசியல் கட்சிகள் இக்கட்டான சூழலை எதிர் கொள்ளும்போது, கருத்து வேறு பாடுகளும் பரஸ்பர தாக்குதல்களும் இன ரீதியான விவகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கின்றன என்று கூறினார்.
” ‘நமது நாடு’ என்று நான் கூறும்போது, அது மற்றவர்களின் நிலையைத் தாழ்த்திக் கூறுவதாக அர்த்தமல்ல—நிச்சயமாக அப்படி இல்லை. மலாய் மன்னர்களின் உரிமைகளையும், அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள விதிகளையும் நாங்கள் ஏற்றுக்கொள் கிறோம்.
“இருப்பினும், நமது குழந்தைகள் இந்நாட்டில் அந்நியர்களாக உணரக்கூடாது என்பதை உறுதி செய்வது மிக முக்கியம். 1950-களின் சூழலை நான் புரிந்துகொள்கிறேன்; அப்போது நாம் சுதந்திரத்தின் விளிம்பில் இருந்தோம், அனைவரும் தங்கள் சமூகங்களின் இருப்பைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தினர்.
“1960-களில், நாடு இன்னும் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தது. அதிர்ஷ்டவசமாக, துங்கு அப்துல் ரஹ்மான், துன் ரசாக், துன் டான் சியூ சின் மற்றும் துன் சம்பந்தன் போன்ற தலைவர்கள் நமக்குக் கிடைத்தனர்; அவர்கள் நாட்டின் நலன்களுக்கே முன்னுரிமை அளித்தனர்.
“பிற்காலத்தில், அரசியல் சிக்கலானதாகவும் மோதல் நிறைந்ததாகவும் மாறியது. மோதல்களும் பரஸ்பர தாக்குதல்களும் தொடர்ந்தன; இது ஆதரவு விலகலுக்கும், இன ரீதியான விவகாரங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்படு வதற்கும் வழிவகுத்தது. அரசியல் ரீதியாக இக்கட்டான சூழல் ஏற்படும்போதெல்லாம், இன விவகாரங்கள் பயன்படுத்தப்பட்டன,” என்று கோத்தா லக்ஸமனாவில் நடைபெற்ற ‘சீன கலாச்சார இரவு 2026’ (Chinese Cultural Night 2026) நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் மற்றும் மலாக்கா மாநிலச் செயலாளர் டத்தோ சல்ஹா சல்லே ஆகியோரும் கலந்துகொண்டனர்.




