Vimarsagan Media

Home » World » பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் சகோதரி அலீமா கான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் சகோதரி அலீமா கான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தா னின் முன்னாள் அதிபரான இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் நேற்று அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அதிபரான இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு சகோதரி அலீமா கான் தொடர்ந்து சண்டை மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு அவரது கட்சியான தெஹ்ரீக் – இ – இன்சாப் வரும் செப்டம்பர் 27ம் திகதி மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள இந்நிலையில் அவரது சகோதரி அலீமா கானின் கைது அரங்கேறியுள்ளது.

அலீமா கான் பொது அமைதியை சீர்குலைக்க கூடும் என்ற அடிப்படையில் பஞ்சாப் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் அவரை 30 நாட்கள் காவலில் வைக்க லாகூர் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.சகோதரி அலீமா கான் தற்போது லக்பத் சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top