Vimarsagan Media

Home » Malaysia » நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் மாநில முன்னாள் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தார்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் மாநில முன்னாள் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தார்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் (Yang di-Pertuan Besar) துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், மாநில நிர்வாகக் குழு ( உறுப்பினர் களின் நியமனங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளதாக, செப்டம்பர் 20 அன்று அரச மாளிகை (Istana) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் பதவிப் பிரமாணத்தை மீறியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.

மாநில நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 7 அன்று, மாநில ஆட்சியாளரின் முன்னிலையில் இந்த உறுப்பினர்கள் பதவிப் பிரமாணத்தையும் விசுவாசப் பிரமாணத்தையும் ஏற்று அதில் கையெழுத்திட்டிருந்தனர் என்றும் அது குறிப்பிட்டது.

நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பின்படி, மந்திரி பெசார் (மாநில முதலமைச்சர்) தவிர மற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாநில ஆட்சியாளரின் விருப்பத்தின் பேரிலேயே தங்கள் பதவியில் நீடிக்க முடியும்.

ஆட்சியாளர் மற்றும் அரச நிறுவனத்தின் மீது விசுவாசமாக இருப்பதற்கும், மாநில அரசியலமைப்பின் இறையாண் மையைப் பாதுகாத்து நிலைநிறுத்து வதற்கும் அந்த உறுப்பினர்கள் உறுதியளித்திருந்ததாக அறிக்கை கூறியது; அத்துடன் ‘தேவான் கேடிலான் டான் உண்டாங்க்’ (Dewan Keadilan dan Undang) சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் அது அங்கீகரித்தது.

“இருப்பினும், செப்டம்பர் 15 அன்று அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் அந்தப் பதவிப் பிரமாணத்தை அவர்கள் மீறியுள்ளனர்,” என்று செப்டம்பர் 20 அன்று இரவு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தெரிவித்தது.

Scroll to Top