அம்பாங் மற்றும் லெம்பா கெராமாட் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான மிகக் கடுமையான மழையின் காரணமாக, நேற்று கூட்டரசு தலைநகரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கூட்டரசு தலைநகரில் வழக்கமாகப் பதிவாகும் 30 மி.மீ மழையளவை விட, நேற்று பதிவான 155 மி.மீ மழையளவு ஐந்து மடங்குக்கும் அதிகமாக இருந்ததாக கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மக் உஜுட் தெரிவித்தார்.
“நேற்று மதியம் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும், குறிப்பாக சிலாங்கூரில் உள்ள அம்பாங், கிளாங் கேட்ஸ் அணை மற்றும் லெம்பா கெராமாட் ஆகிய மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கடுமையான மழை வரை பதிவானது,” என்று அவதானிப்பு கள் காட்டுகின்றன.




