வர்த்தகர்களுக்கான செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தீபாவளிச் சந்தையில் (பசார்) பங்கேற்பதற்கான கட்டணம் 85% குறைக்கப்பட்டு, முன்பணம் உட்பட அதிகபட்சம் RM400-ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான RM400 கட்டணத்தில், RM30 உரிமக் கட்டணம், RM150 சேவைக்கட்டணம், RM150 இட வாடகை மற்றும் RM70 முன்பணம் ஆகியவை அடங்கும்.
ஒப்பீட்டளவில், கடந்த காலத்தில் வர்த்தகர்கள் மொத்தம் RM2,626 செலுத்த வேண்டியிருந்தது; இதில் RM21 உரிமக் கட்டணம், RM105 சேவைக்கட்டணம், RM500 இட வாடகை மற்றும் RM2,000 முன்பணம் ஆகியவை அடங்கியிருந்தன.
ரம்ஜான் சந்தைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களுக்கு இணையாகவே இந்தக் புதிய கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகக் கூறிய கூட்டாட்சிப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ, வர்த்தகக் காலமும் முன்பு இருந்த 21 நாட்களிலிருந்து 30 நாட்களாக நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“எங்களின் நோக்கம் எளிமையானது. வர்த்தகர்களுக்கான செலவுகளைக் குறைக்கவும், அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு வணிகம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கவும் நாங்கள் விரும்புகிறோம்.
“கோலாலம்பூரில் உள்ள வர்த்தகர் களுக்கு வணிகச் செலவைக் குறைக்கும் எங்கள் அணுகுமுறைக்கு ஏற்ப, இந்த ஆண்டு விற்பனை இடங்களின் (lots) எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.”




