தங்கள் காலணிகளுக்குள் மறைத்து வைத்து 5 கிலோ எட்டோமிடேட் (etomidate) எனும் செயற்கை போதைப்பொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஐந்து மலேசியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா (AirAsia) விமானம் மூலம் ஜகார்த்தாவின் சோகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அந்த ஐவரையும் இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக ‘புலெட்டின் டிவி3 செய்தி வெளியிட்டுள்ளது.
தேசியக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் போதைப் பொருள் குற்றப் பிரிவு இயக்குனர் எக்கோ ஹாடி சாண்டோசோ (Eko Hadi Santoso), சந்தேக நபர்களின் நடவடிக்கை களில் சந்தேகம் அடைந்த சுங்க மற்றும் கலால் துறை அதிகாரிகள் அவர்களைச் சோதனையிட்டதாகத் தெரிவித்தார்.
சோதனையின்போது, ஒவ்வொரு சந்தேக நபரும் தங்கள் காலணிகளின் உட்புற அடிப்பாகத்தில் (insole) தலா 500 கிராம் எடையுள்ள இரண்டு பொட்டலங்கள் கொண்ட வெள்ளை நிறப் பொடியை மறைத்து வைத்திருந்தது கண்டறியப் பட்டதாக அவர் கூறினார். “மொத்தம் 5 கிலோ எடையுள்ள 10 பொட்டலங்கள் இருந்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.
டெலிகிராம் (Telegram) செயலி மூலம் ஒரு நபரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த ஐவரும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ஜகார்த்தாவிற்கு வந்தடைந்ததும், அவர்கள் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று, தங்கள் காலணிகளை ஒரு சிவப்பு நிறப் பையில் வைத்து, ஹோட்டல் வரவேற்பறையில் இருந்த சீன நாட்டவர் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அந்தச் சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்; அதைத் தொடர்ந்து, வட ஜகார்த்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சாவிகளைப் போலீசார் கண்டறிந்தனர். அந்தக் குடியிருப்பு, நரம்பு வழியாகச் செலுத்தப்படும் குறுகிய கால மயக்க மருந்தான எட்டோமிடேட் கலந்த ‘வேப் பாட்’ (vape pod) சாதனங்களைத் தயாரிக்கும் ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிற




