Vimarsagan Media

Home » Malaysia » *தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா*

*தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா*

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் அமைச்சருமான *தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் நூற்றாண்டு கொண்டாட்டம்* கீழ்க்கண்டவாறு நடைபெறும்.

நாள் : *4 அக்டோபர்* 2026, ஞாயிறு

நேரம் : *2.00 மணி* முதல்

இடம் : *செந்துல் செட்டியார் மண்டபம்* , ஜாலான் ஈப்போ கோலாலம்பூர்

1959 முதல் கிள்ளான்-போர்ட் கிள்ளான் *நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவும்* 1961 முதல் 1964 வரை *தொழிலாளர் துணையமைச்சராகவும்* பின்னர் 1964 முதல் 1979 வரை *தொழிலாளர், தொடர்புத் துறை, போக்குவரத்து என பல்வேறு துறைகளின் அமைச்சராகவும்* பணியாற்றியவர் மாணிக்கவாசகம். *1973-இல் மஇகாவின் தேசியத் தலைவரான* மாணிக்கவாசகம், 6 ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியை வகித்தாலும், அந்தக் குறுகிய காலத்தில் நேசா கூட்டுறவுக் கழகம், மஇகா யூனிட் டிரஸ்ட் என பல்வேறு இந்தியர் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மஇகாவிலும், இந்திய சமுதாயத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். அமைச்சராக அரசாங்கத்திலும் நாட்டு முன்னேற்றத்திற்கென சொக்சோ திட்டம், மாஸ் விமான நிறுவன உருவாக்கம் என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.

இந்த நிகழ்ச்சிகளின் இடையே சிறப்பு அங்கமாக, *இரா.முத்தரசன் எழுதிய ‘தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நினைவுகள்- அனுபவங்கள்- சாதனைகள்’* என்ற தமிழ் நூலும், ‘Tan Sri Manickavasagam: Memories-Reflections-Achievement’ என்ற ஆங்கில நூலும் ஒருசேர *டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமையில் வெளியீடு* காணவிருக்கின்றன.

தான்ஸ்ரீ க.குமரன், தான்ஸ்ரீ டி.மாரிமுத்து, டத்தோ வீ.நடராஜன், டத்தோ ஈஸ்வர் ஆதி.நாகப்பன், பெரு.அ.தமிழ்மணி, ரமணி மாணிக்கவாசகம் ஆகியோர் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் குறித்து சிறப்புரைகள் வழங்குவர்.

*தேநீர் விருந்துபசரிப்புடன் நூல் வெளியீட்டு விழா நிறைவு பெறும்.* இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரையும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Scroll to Top