Vimarsagan Media

Home » Malaysia » மாணவர் உயிரிழப்பு:-கொலை வழக்கில் சந்தேக நபர் மீது கொடுமைப் படுத்தியதாக ஐவர் குற்றச்சாட்டு

மாணவர் உயிரிழப்பு:-கொலை வழக்கில் சந்தேக நபர் மீது கொடுமைப் படுத்தியதாக ஐவர் குற்றச்சாட்டு

கடந்த வெள்ளிக்கிழமை கோலா பிலாவில் படிவம்’ 2′ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரால் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக ஐந்து மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பதிவு செய்யப்பட்ட 69 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மீதான கூடுதல் விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தகவல் தெரியவந்ததாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்சாஃப்னி அஹ்மட் தெரிவித்தார்.

“விசாரணை மற்றும் வாக்குமூலங் களைப் பதிவு செய்யும் நடவடிக்கை களின்போது, ​​இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரால் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக ஐந்து மாணவர்கள் கூறினர்.

“தற்போது வரை, முறையே அக்டோபர் 1 மற்றும் 3-ஆம் தேதிகள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 16 வயதுடைய இரண்டு ஆண் சந்தேக நபர்களைத் தவிர, வேறு யாரும் புதிதாகக் கைது செய்யப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

பள்ளியில் தான் துன்புறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவர் தனது குடும்பத்தினரிடம் ஒருபோதும் கூறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 25 அன்று, கோலா பிலாவில் உள்ள விளையாட்டுப் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவத்தில் ‘ஃபார்ம் 2’ மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் ‘படிவம் 4’ (Form 4) மாணவரான முதல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். நேற்று மற்றொரு 16 வயது மாணவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Scroll to Top