இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இ ணைந்து தயாரித்துள்ளது.இந்த படம் இன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகை ஜோதிகா ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிக்மா படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலைப் பார்க்கும் போது பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக மகிழ்ச்சியைத் தருகிறார். நீங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, உங்களுக்கு கிடைக்கவுள்ள வெற்றி க்குத் தகுதியானவர் என தெரிகிறது. உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இருக்கும் உங்களையும், படக்குழுவின ரை யும் வாழ்த்துகிறேன். உங்களின் ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீடு சிறப்பாக அமையட்டும். கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.” என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்




