Vimarsagan Media

Home » Malaysia » மறைந்த துணைவியாரின் கல்லறை கண்ணீருடன் சென்றார் கலங்கினார் முன்னாள் பிரதமர் மகாதீர்

மறைந்த துணைவியாரின் கல்லறை கண்ணீருடன் சென்றார் கலங்கினார் முன்னாள் பிரதமர் மகாதீர்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது புத்ராஜெயாவில் உள்ள புசாரா நெகராவில், காலஞ்சென்ற துணைவியார் சித்தி ஹஸ்மா முகம்மது அலியின் கல்லறைக்கு நேற்று (அக்டோபர் 1) சென்றபோது, தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கினார்.

தேசிய இதய நிலையத்திலிருந்து நேரடியாக காலை 11 மணிக்கு அங்குச் சென்றடைந்த டாக்டர் மகாதீர், கல்லறைப் பகுதியில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் செலவிட்டு, பிரார்த்தனை செய்து மலர்களைத் தூவியதாக ‘சினார் ஹரியான்’ செய்தி வெளியிட்டது.

டாக்டர் மகாதீரின் முகத்தில் ஆழ்ந்த துயரமும் ஏக்கமும் தெளிவாகத் தெரிந்ததாகக் கூறப்பட்டது.

சித்தி ஹஸ்மா, செப்டம்பர் 28ஆம் தேதி காலை 9.20 மணிக்குக் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிலையத்தில் தமது 100வது வயதில் காலமானார்.

அரசு மரியாதையுடன் நடத்தப்பட்ட இறுதிச்சடங்கைத் தொடர்ந்து, அன்றைய தினமே அவரது நல்லுடல் புசாரா நெகராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது மூத்த மகள் மரினா மகாதீரும் அவரது கல்லறைக்குச் சென்றிருந்தார். பொதுமக்களுடன் இணைந்து பிரபல பாடகர் ரம்லி சரிப், புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ராட்ஸி முகம்மது ஜிதின் ஆகியோரும் அவருக்கு மரியாதை செலுத்துவதைக் காண முடிந்தது.

Scroll to Top