Vimarsagan Media

Home » Malaysia » ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் 2026′ பட்டியலில் ஐந்து மலேசிய வணிகத் தலைவர்கள்

ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் 2026′ பட்டியலில் ஐந்து மலேசிய வணிகத் தலைவர்கள்

ஃபார்ச்சூன்’ (Fortune) இதழின் ‘ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் 2026’ பட்டியலில் ஐந்து மலேசிய வணிகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்; இதில் UOB மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி இங் வெய் வெய் 85-வது இடத்தைப் பிடித்து, பட்டியலில் இடம்பெற்ற மலேசியர்களில் மிக உயர்ந்த நிலையில் உள்ளார்.

பெர்ஜாயா கார்ப் பெர்ஹாட் (Berjaya Corp Bhd)-யின் தலைமை நிர்வாக அதிகாரி நெரின் டான் ஷீக் பிங் 91-வது இடத்தையும், சன்வே குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் டத்தின் படுகா சரீனா சியா 92-வது இடத்தையும் பிடித்தனர்.

அஃபின் வங்கி (Affin Bank Bhd)-யின் குழுமத் தலைமை நிதி அதிகாரி ஜோன் ரோட்ரிக்ஸ் 99-வது இடத்தையும், பப்ளிக் வங்கி பிஎச்டி (Public Bank Bhd)-யின் தலைமை நிதி அதிகாரி யிக் சூக் லிங் 100-வது இடத்தையும் பிடித்தனர்.

2025-ஆம் ஆண்டில் நான்கு மலேசிய நிர்வாகிகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய தரவரிசையில் மலேசியாவின் பிரதிநிதித்துவத்தில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு 95-வது இடத்தில் இருந்த ங், 10 இடங்கள் முன்னேறி 85-வது இடத்தைப் பிடித்தார்.டான், சியா மற்றும் யிக் ஆகியோர் இந்த ஆண்டு தரவரிசையில் புதிதாக இணைந்த மலேசியர்களாவர்.

ஆசியா முழுவதும் தலைமைத்துவம், வணிகச் செயல்பாடு மற்றும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் 100 பெண்களை அங்கீகரிக்கும் வகையில், ‘ஃபார்ச்சூன்’ தனது மூன்றாவது வருடாந்திர ‘ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலை வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் மலேசியாவிலிருந்து ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்; அதேவேளையில், சீனப் பெருநிலப்பகுதி யிலிருந்து 18 பேரும், ஹாங்காங் கிலிருந்து 16 பேரும், சிங்கப்பூரிலிருந்து 12 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

படத்தில்:-மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி இங் வெய் வெய் (Ng Wei Wei)

Scroll to Top