Vimarsagan Media

Home » World » இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி கைது

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மனைவி கைது

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ராஜபக்சே குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகள் குழு அவரை கைது செய்தது. இலங்கையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிபராகவும், 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் அதிகாரத்தில் கோலோச்சியவர் ராஜபக்சே.

கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜனமுன்னணி கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுர குமரா திசநாயகே பதவியேற்றுள்ள நிலையில், ஊழல் வழக்குகளை ராஜபக்சே குடும்பம் எதிர்கொண்டுள்ளது.

Scroll to Top