வாகன நிறுத்துமிடத் தரகர்களுக்கு கோலாலம்பூர் மாநகராஉண்மை கழகம் (DBKL) அறிவிப்புகள் வழங்குவதில்லை என்றும், நடவடிக்கைகளின் போது பிடிபடுபவர்களை உடனடியாகக் கைது செய்கிறது என்றும் மேயர் டத்தோ ஃபட்லூன் மக் உஜுத் இன்று தெரிவித்தார்.
தலைநகரைச் சுற்றியுள்ள 49 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், மலாய் மொழியில் பொதுவாக ‘உலாட் பார்க்கிங்’ என்று அழைக்கப்படும் 84 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“நாங்கள் அறிவிப்புகள் வழங்குவ தில்லை. நாங்கள் அவர்களைக் கைது செய்கிறோம். நாங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களைக் கண்டறிந்தால், அவர்களைக் கைது செய்கிறோம்,” என்று இங்குள்ள மக்கள் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் உள்ள வாங்சா சாரி அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால் அமலாக்க அதிகாரிகள் வரும்போது தரகர்கள் சில சமயங்களில் தப்பி ஓடிவிடுவதாகவும் ஃபட்லூன் கூறினார்.
“சில நேரங்களில், எங்கள் அமலாக்க அதிகாரிகள் வரும்போது, அவர்கள் தப்பி ஓடிவிடுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
சமீபத்தில், பணம் செலுத்துவது தொடர்பாக ஒரு வாகன ஓட்டியிடம் வாகன நிறுத்துமிடத் தரகர் என்று கூறப்படும் ஒருவர் வாக்குவாதம் செய்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ வாகன நிறுத்துமிடக் கட்டணம் இல்லாத இடங்களில், வாகன ஓட்டிகளை அணுகி பணம் கோரும் தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை களை இது மீண்டும் எழுப்பியுள்ளது




