Vimarsagan Media

Home » Malaysia » புகைமூட்டத்திற்கு இடையே திறந்தவெளியில் குப்பைகளை எரித்த 1,447 சம்பவங்கள் பதிவாகியுள்ளன

புகைமூட்டத்திற்கு இடையே திறந்தவெளியில் குப்பைகளை எரித்த 1,447 சம்பவங்கள் பதிவாகியுள்ளன

நாட்டை, குறிப்பாக சரவாக் மாநிலத்தைப் பாதிக்கும் எல்லை தாண்டிய புகைமூட்டச் சூழலுக்கு மத்தியில், இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் மொத்தம் 1,447 திறந்தவெளி எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக டத்தோ ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 29 வரையிலான காலத்தில் இந்தத் திறந்தவெளி எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியதாகவும், இதன் விளைவாகச் சுற்றுச்சூழல் துறை மற்றும் தொடர் புடைய முகமைகளால் 2,132 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட தாகவும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் கூறினார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 41 அறிவிப்புகள் மற்றும் 27 அபராதங்கள் (compounds) விதிக்கப்பட்டதும், மூன்று வழக்குகள் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதும் அடங்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதே காலகட்டத்தில் சரவாக் மற்றும் ஜொகூர் மாநிலங்களில் ஏற்பட்ட 14 பெரிய தீ விபத்துகள் முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆகஸ்ட் 30 முதல் அக்டோபர் 1 வரையிலான காலத்தில் நாடு முழுவதும் ஏழு செயற்கை மழை உருவாக்கும் (cloud seeding) நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், அதில் செப்டம்பர் 3 முதல் 7 வரை சரவாக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 15 முதல் ‘தேசிய திறந்தவெளி எரிப்பு நடவடிக்கை திட்டம்’ அமலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

கேள்வி நேரத்தில் டத்தோ யூசுப் அப்த் வஹாப் டத்தோ முஹம்மது பக்தியார் வான் சிக் (PH-பாலிக் புலாவ்) மற்றும் ஆஸ்கார் லிங் சாய் யூ (PH-சிபு) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

Scroll to Top