மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), 2022 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் வங்கி கணக்குகள், நகைகள், அசையாச் சொத்துக்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் RM1.27 பில்லியன் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.
பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன், ‘பணமோசடி தடுப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட வருவாய் சட்டம் 2001’-இன் பிரிவு 44-ன் கீழ் இந்தச் சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரிவித்தார்.
இச்சட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டில் 1,336 சொத்து முடக்க உத்தரவுகளும், 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை மேலும் 1,006 உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
2025-இல் மொத்தம் 481 முடக்க உத்தரவுகள் எவ்விதக் குற்றச்சாட்டு களும் இன்றி ரத்து செய்யப்பட்டன; அதேவேளையில், 2026-இன் முதல் ஒன்பது மாதங்களில் மேலும் 781 உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஒரு சொத்து முடக்க உத்தரவை திரும்பப் பெறுவது, ரத்து செய்வது அல்லது அதில் மாற்றம் செய்வது என்பது, எவ்விதக் குற்றமும் நடைபெறவில்லை என்றோ அல்லது விசாரணைக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்றோ அர்த்தமல்ல.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) மக்களவையின் (Dewan Rakyat) சிறப்பு அவை அமர்வின் போது, டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். அக்கேள்வி, இச்சட்டத்தின் பிரிவு 44-ன் கீழ் சொத்துக்களை முடக்கும் அதிகாரம் மற்றும் MACC தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் விசாரணை விவகாரங்கள் குறித்ததாக இருந்தது




