Vimarsagan Media

Home » Malaysia » சமயம் சார்ந்த விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தாதீர்: மலேசிய அமைச்சர் யுனேஸ்வரன்

சமயம் சார்ந்த விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தாதீர்: மலேசிய அமைச்சர் யுனேஸ்வரன்

மலேசியாவில் இனம், சமயம், அரசக் குடும்பம் சார்ந்த விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று சமூக ஊடகப் பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்க சமயச் சடங்குகளை இணைய உள்ளடக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி நினைவூட்டப்பட்டது.

அதிகமானோர் பின்தொடரும் சமூக ஊடகப் பயனீட்டாளர்கள் சரியான உள்ளடக்கங்களைத் தயாரிப்பதில் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டுமே தவிர இனம், சமயம், அரச குடும்பம் சார்ந்த விவகாரங்களைச் சுய ஆதாயத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் ரா. யுனேஸ்வரன் கூறினார்.

“கூடுமானவரை சமயம், இனம், அரசக் குடும்பம் தொடர்பான விவகாரங்களை விட்டுத் தள்ளியிருங்கள். குறிப்பிட்ட சமயத்தைச் சாராத சமூக ஊடகப் பயனீட்டாளர்கள் அதில் பின்பற்றப்படும் சடங்குகள், வழக்கங்கள் குறித்து அறியாமல் இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமை அமைச்சுடன் இணைந்து பல நல்ல விவகாரங்களை முன்னிறுத்த முடியும் என்று அவர் மேலும் சுட்டினார்.சிலாங்கூரின் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்ட சமூக ஊடகப் பயனீட்டாளர் தொடர்பான விவகாரத் தைத் திரு யுனேஸ்வரன் சுட்டிப் பேசினார் என்று நம்பப்படுகிறது.

Scroll to Top