Vimarsagan Media

Home » Malaysia » தஞ்சோங் பாலாயில் 4 கிலோ சயாபு வழக்கில் கைது செய்யப்பட்டவர் இந்தோனேசியர் , மலேசியர் அல்ல!

தஞ்சோங் பாலாயில் 4 கிலோ சயாபு வழக்கில் கைது செய்யப்பட்டவர் இந்தோனேசியர் , மலேசியர் அல்ல!

இந்தோனேசியாவின் தஞ்சங் பாலாய் பகுதியில், அக்டோபர் 10 அன்று நான்கு கிலோகிராமுக்கும் அதிகமான ஷாபு போதைப்பொருளைக் கடத்தியதற்காக மலேசியப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள் மற்றும் சமூக ஊடகங்க ளில் வெளியான செய்திகளை மலேசிய அரச காவல்துறை (PDRM) மறுத்துள்ளது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான், குடியரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான இந்தோனேசிய இளைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

மேடானைச் சேர்ந்த அந்த சந்தேக நபர், இந்தோனேசியாவில் உள்ள ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர் என்றும் அவர் கூறினார்.மலேசியாவில் உள்ள ஒரு கும்பலிடமிருந்து போதைப்பொருள் பெறப்பட்டு, பின்னர் கடத்தப்பட்டதாக ஹுசைன் தெரிவித்தார்.

“கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மற்றொரு இந்தோனேசிய நபரால், தஞ்சங் பாலாய் படகு முனையம் வழியாக இந்தோனேசியாவுக்குக் கொண்டு வருவதற்காக இந்தப் போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டது என மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனிலி ருந்து படகில் தஞ்சங் பாலையில் உள்ள தெலுக் நிபுங் படகு முனையத்திற்கு வந்தடைந்த சந்தேக நபர், அக்டோபர் 10 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தஞ்சங் பாலை காவல் துறையினரால் (POLRES) கைது செய்யப்பட்டார்.

அந்த நபரின் உடமைகளை எக்ஸ்-ரே ஸ்கேன் செய்ததில், 4.044 கிலோகிராம் எடையுள்ள, மெத்தம்பெட்டமைன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எட்டு பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹுசைன் கூறினார்.

Scroll to Top