Vimarsagan Media

Home » Malaysia » வைரலான ‘கடினமான’ கேள்வி விவகாரம்: பல்கலைக்கழக மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

வைரலான ‘கடினமான’ கேள்வி விவகாரம்: பல்கலைக்கழக மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

‘ஐ-ஃபியூச்சர்’ (i-Future) நிகழ்ச்சியின் போது கடினமான கேள்வி ஒன்றைக் கேட்டு, சமூக ஊடகங்களில் வைரலான மாணவர் மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணம் உயர்கல்வி அமைச்சுக்கு (MOHE) அல்லது மலாயா பல்கலைக்கழகத்திற்கோ (UM) இல்லை.

மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பதில் அமைச்சகம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார். அதே வேளையில், அந்த மாணவர் மீது சமூக ஊடகங்களில் தொடுக்கப்பட்ட அவதூறுகள், அவமதிப்புகள் அல்லது அச்சுறுத்தல் களை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

“எனது நிலைப்பாடு தெளிவானது. மாணவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல, 1971-ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டத்தில் (AUKU) கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், மாணவர்களுக்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன.

“இந்தச் சுதந்திரத்தைப் பொறுப்புடனும், கண்ணியத்துடனும், உண்மைகளின் அடிப்படையிலும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்,” என்று இன்று டிக்டாக் (TikTok) தளத்தில் பகிரப்பட்ட அறிக்கையில் அவர் கூறினார்.

Scroll to Top