பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியின் பதிவை மலேசியச் சங்கங்களின் பதிவாளர் ரத்து செய்துள்ளார்
பதிவை ரத்து செய்வதற்கான காரணங்களை விளக்கி அறிக்கை அனுப்பப்பட்டிருந்த வேளையில், கூட்டணி சமர்ப்பித்த விளக்கங்கள் அந்தக் காரணங்களை மறுக்கத் தவறின.
அதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் பதிவு செய்ய நீக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களையும் விளக்கங்களையும் ஆய்வு செய்ததாகவும் சங்கங்களின் பதிவாளர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
“பெரிக்காத்தான் கூட்டணி அளித்த காரணங்கள் அதன் பதிவைத் தக்கவைத்துக்கொள்வதற்கு வலுவான நியாயத்தை வழங்கவில்லை.
“அதன் அடிப்படையில், 1966ஆம் ஆண்டின் சங்கங்கள் சட்டத்தின் பிரிவுகளுக்கு இணங்க பதிவை ரத்து செய்யச் சங்கங்களின் பதிவாளர் முடிவெடுத்துள்ளார்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 22ஆம் தேதியிட்ட அறிக்கை ஒன்றை அந்தக் கூட்டணிக்கு அனுப்பியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து விளக்கமும் முறையீடும் சமர்ப்பிக்க அதற்கு வாய்ப்பளித்த தாகவும் பதிவாளரின் அறிக்கை கூறுகிறது.அதனைத் தொடர்ந்து பெரிக்காத்தான் கூட்டணி அக்டோபர் 12ஆம் தேதி அதற்குப் பதிலளித்தது.




