ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணியான கேத்தி ஹாமில்டன், புகைமூட்டத்தால் சூழப்பட்ட பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களை (Petronas Twin Towers) புகைப்படம் எடுக்க முடியாமல் திணறிய போது, மலேசியாவுக்கு வந்ததற்காக வருத்தமடைந்தார்.
சிட்னியைச் சேர்ந்த அவர், “இரட்டைக் கோபுரங்கள், மெர்டேகா 118 (Merdeka 118) மற்றும் பிற இடங்களை அழகாகப் புகைப்படம் எடுக்க முயன்றேன். ஆனால், புகைமூட்டம் காரணமாக எதையும் தெளிவாகப் படம் பிடிக்க முடியவில்லை” என்று கூறினார். இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் உருவான புகை இப்பகுதி முழுவதையும் சூழ்ந்திருந்ததால், அவரால் சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.
வார இறுதியில் தனது மகள்கள் பங்கேற்ற ‘ஐசியு ஆசிய சீர்லீடிங் சாம்பியன்ஷிப்’ (ICU Asian Cheerleading Championships) போட்டி இல்லை யென்றால், தான் இந்த பயணத்தையே ரத்து செய்திருப்பேன் என்று ஹாமில்டன் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில், மலேசியாவுக்கு வருவதைப் பற்றி மறுபரிசீலனை செய்யும் சுற்றுலாப் பயணிகள் இவரைப் போல இன்னும் பலர் உள்ளனர்.
இந்த புகைமூட்டத்தால் விமான சேவை கள் பாதிக்கப்பட்டுள்ளன; நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மறைக்கப் பட்டுள்ளன. இதனால், சுற்றுலாத் துறையினர் முன்பதிவுகள் குறை வதையும், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து செய்யப்படு வதையும் எதிர்கொள்கின்றனர். இது தென்கிழக்கு ஆசியப் பொருளாதார த்தின் முக்கிய தூணாக விளங்கும் சுற்றுலாத் துறையை அச்சுறுத்துகிறது.
காற்றுத் தரத்தைக் கண்காணிக்கும் ‘ஐக்யூஏர்’ (IQAir) நிறுவனத்தின் நேரடி தரவரிசைப்படி, அக்டோபர் 20 அன்று உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் ஜகார்த்தா ஆகியவை இடம்பெற்றன. மோசமான காற்றுத் தரத்தின் காரணமாக, மலேசியாவின் சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன.




