2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 69,600 ரிங்கிட் தொகையைப் பெற்றதாகத் தொடரப்பட்ட 46 ஊழல் வழக்குகளில், அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
அமர்வு நீதிமன்ற நீதிபதி சஸ்லினா சாஃபி, புதன்கிழமை (அக்டோபர் 21) அன்று, 56 வயதான அசார் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள், தண்டனைச் சட்டத்தின் (Penal Code) பிரிவு 165-ன் கீழ் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தார்.
இந்தப் பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம், அல்லது இவை இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிபதி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அசாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதித்ததுடன், இந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இருப்பினும், தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான அவரது விண்ணப் பத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். மேலும், 30,000 ரிங்கிட் பிணைத் தொகையுடன் ஒரு நபர் பிணையாளரை வழங்கவும், மேல் நடவடிக்கைகள் முடியும் வரை தனது கடல்பிதழ் (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
முன்னதாக, அசாரின் வழக்கறிஞர் டத்தோ எம். ஆதிமூலன், சிறைத்தண் டனை க்கு பதிலாக அபராதம் மட்டும் விதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இந்தத் தீர்ப்பினால் தனது கட்சிக்கார ருக்கு மலேசிய அரச காவல் படையில் (PDRM) இருந்து பணிநீக்கம் செய்யப்படுதல் மற்றும் ஓய்வூதிய உரிமைகளை இழத்தல் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர் தனது தொழில் வாழ்க்கை, நற்பெயர் மற்றும் சமூக அந்தஸ்து என அனைத்தையும் இழக்கும் சூழலில் உள்ளார். இதுவே அவருக்கு ஒரு கடுமையான தண்டனையாகும்.
“33 ஆண்டுகால பொதுச் சேவையில், அவர் மீது எந்தக் குற்றப் பின்னணியோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையோ இருந்ததில்லை; அவரது பணிப்பதிவு மிகவும் நேர்மையானது,” என்று அவர் வாதிட்டார்.




