அரசு ஊழியர்கள் அலுவல் பணிக்காக வேஸ் செயலியைப் பயன்படுத்த மலேசியா தடை விதித்ததைத் தொடர்ந்து, வேஸ் செயலியானது ரகசியமான அரசாங்கத் தகவல்களைச் சேகரிப்பதாகவும், பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை எந்தவொரு தரப்பினரும் சுரண்ட அனுமதிப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
அந்நிறுவனத்தின் செய்தித் தொடர் பாளர் ஒருவர் எப் எம் டி-க்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டுகள் “முற்றிலும் பொய்யான வை” என்று தெரிவித்துள்ளார்.
“பயனர் தரவைப் பாதுகாக்கும் மற்றும் உலகளாவிய சட்டப்பூர்வ தரவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்கும் கடுமையான தனியுரிமைக் கொள்கை களின் கீழ் வேஸ் செயல்படுகிறது,” என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இஸ்ரேலிய சட்டங்களுக்கு உட்பட்டிருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, அலுவல் பணிக்காக வரும் அரசு ஊழியர்களுக்கு வேஸ் செயலியைப் பயன்படுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம் தடை விதித்தார்.
பொதுமக்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை, இருப்பினும் மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் புரோசிக்னல் கன்சார்டியம் எஸ்.டி.என். பி.எச்.டி. ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட டுஜு (TuJu) போன்ற உள்ளூர் மாற்றுச் செயலி களுக்கு மாறுமாறு மலேசியர்களை அன்வார் வலியுறுத்தினார்.




