Vimarsagan Media

Home » Entertainment » தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட மார்வெல்

தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்ட மார்வெல்

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உள்ளது. இந்த படம் ‘மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்’ வரிசையில் 39-வது திரைப்படமாக வெளியாகிறது. இதற்கு முன்பு ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரஸ்சோ பிரதரஸ் இப்படத்தையும் இயக்கியுள்ளனர்.

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக இந்தியாவில் இந்த படம் டிசம்பர் 18-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி, ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 17-ந்தேதி வெளியாகும் என மார்வெல் இந்தியா அறிவித்துள்ளது.

தீபாவளி வாழ்த்து மேலும் இந்திய ரசிகர்களுக்காக தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை மார்வெல் இந்தியா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ் ஆகியோர் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மார்வெல் திரைப்படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்திய மக்களின் முக்கிய பண்டிகைக்கு மார்வெல் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top