ஜொகூர், சபா, சரவாக் மற்றும் பினாங்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்ற பாலன் ராஜ் Musical Night இசை நிகழ்ச்சி, தற்போது தனது 5ஆவது நிகழ்ச்சியாக நவம்பர் 2ஆம் தேதி கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் நடைபெறவுள்ளது.
Agenda Suria Communication Deepavali Carnival நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்நிகழ்ச்சி, நவம்பர் 2, 2026 திங்கட்கிழமை, மாலை 7.25 மணி முதல் இரவு 9.45 மணி வரை, Bukit Jalil, National Sports Complex – Open Car Park B பகுதியில் நடைபெறுகிறது.
9 உள்ளூர் கலைஞர்களுடன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
மலேசியாவின் திறமையான 9 உள்ளூர் கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இந்நிகழ்ச்சி படைக்கப்படவுள்ளது.
இசையமைப்பாளர் பாலன் ராஜ், தனது நீண்டகால இசைப் பயணத்தில் உருவாக்கியுள்ள சிறப்பான இசைப் படைப்புகள் மற்றும் பிரபலமான உள்ளூர் பாடல்களை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி அமையவுள்ளது.
மலேசிய மண்ணில் உருவான உள்ளூர் இசை மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளூர் கலைஞர்களால், உள்ளூர் ரசிகர்களுக்காக இந்த இசை இரவு நிகழ்ச்சி தயாராகிறது.
இசை • உணர்வு • ஒன்றிணைவு
பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த 5ஆவது நிகழ்ச்சி, மலேசிய உள்ளூர் இசைக் கலைஞர்களின் திறமையை ஒரே மேடையில் கொண்டுவரும் ஒரு சிறப்பு இசை விருந்தாக அமையும்.
பாலன் ராஜின் இசைப் படைப்புகளை நேரடியாக ரசிப்பதுடன், 9 உள்ளூர் கலைஞர்களின் நேரடி இசை மற்றும் பாடல்களையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
மலேசிய உள்ளூர் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
நுழைவு இலவசம்!
தேதி: 2 நவம்பர் 2026 – திங்கட்கிழமை
நேரம்: மாலை 7.25 மணி – இரவு 9.45 மணி
இடம்: Open Car Park B, National Sports Complex, Bukit Jalil, Kuala Lumpur
நுழைவு இலவசம்
விமர்சகன் | VIMARSAGAN
உள்ளூர் கலை • உள்ளூர் கலைஞர்கள் • உள்ளூர் இசை
Vimarsagan Media விமர்சகன் மீடியா
Ganesan Manohgaran




