அமெரிக்காவில் இன்னும் ஒரு வாரத்தில் இடைத்தவணைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது மக்களின் ஆதரவைத் திரட்டப் பெருமளவு அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்ற செயற்கை நுண்ணறிவின் துணையோடு உருவாக்கப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
அந்தத் தொழில்நுட்பத்தின் உதவியோடு தொகுக்கப்பட்ட காணொளிகள் முதல்…போலிக் காணொளிகள் வரை பிரசாரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுக்காக அரசியல் பிரசாரக் குழுக்கள் 137 மில்லியன் டாலர் (175.6 மில்லியன் வெள்ளி) செலவிட்டுள்ளதாக New York Times தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் உதவியோடு தயாரான 220 அரசியல் விளம்பரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் அரசியல் குழுவினரும் அந்தத் தொழில்நுட்பத்தை வேகமாய்ப் பயன்படுத்துவதாக அவர்கள் கூறினர்.
ஆனால் ஜனநாயகக் கட்சியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கட்சியின் ஆதரவாளர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அதிகம் விமர்சிப்பது அதற்குக் காரணம்




