Vimarsagan Media

Home » Malaysia » 2000ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியான பிரபல மலேசியத் தமிழ் பாடல்களுக்கு மீண்டும் புத்துயிர்!

2000ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியான பிரபல மலேசியத் தமிழ் பாடல்களுக்கு மீண்டும் புத்துயிர்!

மலேசியத் தமிழ் பாடல்களை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பாடகர் சந்தேஷின் முயற்சி. மலேசியத் தமிழ் இசைத்துறையில் 2000ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பல இனிய பாடல்கள் இன்று காலப்போக்கில் மறைந்து வருகின்றன.

இந்நிலையில், அந்தப் பொற்கால மலேசியத் தமிழ் பாடல்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் பாடகர் சந்தேஷ் ஈடுபட்டுள்ளார்.

பழைய பாடல்களின் இனிமையையும், அக்கால இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்களின் திறமையையும் இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், பிரபலமான மலேசியத் தமிழ் பாடல்களை புதிய இசை வடிவில் Cover Songs ஆக வழங்கி வருகிறார்.

மலேசியத் தமிழ் இசையின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த இப்பாடல்கள், அக்கால ரசிகர்களுக்கு பல இனிய நினைவுகளை ஏற்படுத்தியவை. அதேவேளையில், இன்றைய இளம் தலைமுறையினரும் அந்தப் பாடல்களின் சிறப்பை அறிந்து ரசிக்கும் வகையில் சந்தேஷின் இந்த முயற்சி அமைந்துள்ளது.

“பழைய பாடல்கள் வெறும் பாடல்கள் அல்ல; அவை நமது இசை வரலாற்றின் ஒரு பகுதி. அவற்றை மீண்டும் புதிய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்ற நோக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

Malaysian Tamil Cover Songs என்ற முயற்சியின் மூலம், மறக்க முடியாத பழைய மலேசியத் தமிழ் பாடல்களுக்கு மீண்டும் ஒரு புதிய இசைப் பயணத்தை உருவாக்கும் சந்தேஷின் முயற்சி பாராட்டுக்குரியது.

மலேசியத் தமிழ் இசையை நேசிப்போம்…நமது பழைய பாடல்களை மீண்டும் ஒலிக்கச் செய்வோம்!

Santesh

#rewindNplay

Vimarsagan Media விமர்சகன் மீடியா

@highlight

#composer#malaysian#popular#tamilsong#2000s

Scroll to Top