.இன்றைய காலக்கட்டத்தில் கைப்பேசி இல்லையென்றால் கை இழந்தவன் உடுக்கை போல எனலாம். கைக்கு அடக்கமாய் எல்லாமும் மிக நெருக்கமாய் நமக்கும் நம் கைப்பேசிக்கும் உள்ளேயே அடங்கி கிடக்கிறது.
நீங்கள் நாள் முழுவதும் கைபேசியை பயன்படுத்துவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து போகலம். இந்த சூழ்நிலையில், சிலர் போனை 100 சதவீதத்திற்கு முழுமையாக சார்ஜ் செய்கிறார்கள். ஆனால், இது சரியா?
உண்மையில், போனில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், போனை முழுமையாக சார்ஜ் செய்வது பேட்டரி திறனில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. பொதுவாக, தொலை பேசி பேட்டரி ஒரு சுழற்சியில் வேலை செய்கிறது. நீங்கள் போனை 0 முதல் 100 வரை முழுமையாக சார்ஜ் செய்தால், அது பேட்டரி ஆயுளைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது




