Vimarsagan Media

Home » Malaysia » மூன்றாண்டுகளில் 175 குழந்தைகள் சமூக நல பாதுகாப்பில் அடைக்கலம்

மூன்றாண்டுகளில் 175 குழந்தைகள் சமூக நல பாதுகாப்பில் அடைக்கலம்

கடந்த மூன்று ஆண்டுகளில் 1 வயது மற்றும் அதற்குக் குறைவான மொத்தம் 175 குழந்தைகள் மீட்கப்பட்டு சமூக நலத்துறையின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மற்றும் குழந்தை கைவிடப்பட்ட வழக்குகள், 2001 குழந்தைச் சட்டத்தின் பிரிவு 17(1) [சட்டம் 611] இன் கீழ் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார், இதில் ஒரு குழந்தை கைவிடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட அல்லது அவரது பாதுகாவலரால் சரியான பராமரிப்பு வழங்கப்படாத வழக்குகள் அடங்கும்.

அமைச்சும் அதன் நிறுவனங்களும் தேசிய இனப்பெருக்க மற்றும் சமூக சுகாதாரக் கொள்கையை உருவாக்கு வது உட்பட பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தியுள்ளன.

ஜங்கான் மாலு அம்பில் தாஹு, ஜங்கான் மாலு பாகி தாஹு” jangan malu ambil tahu -jangan malu bagi tahu’என்ற பிரச்சாரத்தின் மூலம் இனப்பெருக்க மற்றும் சமூக சுகாதார கல்வி விளம்பர திட்டத்தை அமைச்சு விரிவுபடுத்துகிறது என்றார்.

Scroll to Top