Vimarsagan Media

Home » Malaysia » 58 வயது நபரைத் தாக்கிய பின் 68 வயது முதியவர் தற்கொலை

58 வயது நபரைத் தாக்கிய பின் 68 வயது முதியவர் தற்கொலை

ஜார்ஜ் டவுன்: ஒரு உணவகத்தில் நபர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப் படும் முதியவர் திங்கள்கிழமை நேற்று இங்குள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தார்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில், புலாவ் திக்குஸ் சந்தைக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தில் தெரிந்த ஒருவரால் வெட்டப்பட்ட பின்னர், தலையில் இரத்தக் காயங்களுடன் 58 வயது நபர் ஒருவர் காலை 6.30 மணிக்கு புலாவ் திக்குஸ் காவல் நிலையத்திற்குச் வந்ததாகக் கூறினார். பின் சிகிச்சைக்காக அந்நபர் புலாவ் பினாங் (HPP) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வெட்டியதாக கூறப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீசார் காலை 8.05 மணிக்கு சோலோக் கோட்ரிங்டனில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றப் போது 68 வயதுடைய ஒருவர் வீட்டின் சமையலறைப் பகுதியில் இறந்து கிடந்ததைக் கண்டனர். அவர் கயிற்றைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது, ”என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் விசாரணைகளின் மூலம் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீ தொலைவில் உள்ள புலாவ் திக்குஸ் சந்தைப் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கத்தி கைப்பற்றப்பட்டதாக காம் அசிஸி கூறினார்.

Scroll to Top