நடிகை மற்றும் அவரது கணவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, 56 வயது நபர் ஒருவர் RM1.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி காவல்துறைக்கு புகார் செய்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மானிய நிலங்களை விற்பனை செய்ததில் இந்த மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 7 ஆம் தேதி புகார் அளிக்கப் பட்டதாக சிரம்பான் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அசாஹர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
நில விற்பனை செய்ததில் நடிகையும் அவரது கணவரும் விசாரணையில் உள்ள வழக்கில் சந்தேக நபர்களாக உள்ளனர், இதன் விளைவாக RM1.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கை போலீசார் இன்னும் விசாரித்து வருவதாகவும், சந்தேக நபர்கள் தீபகற்ப மலேசியாவில் இல்லை என்று நம்பப்படுவதால், ஏற்கனவே பல ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் விளக்கினார்.




