Vimarsagan Media

Home » Entertainment » தாய் கிழவி ராதிகா பேர் வெல்லும்

தாய் கிழவி ராதிகா பேர் வெல்லும்

ராதிகா குணசித்திர வேடங்களில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.. தனக்கு எந்த ரோல் கொடுக்கப்பட்டாலும் அதை அசால்ட்டாக செய்து கைத்தட்டல்களை வாங்குபவர். அவர் இப்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தாய் கிழவி படத்தில் நடித்திருக்கிறார்.

தோற்றத்தில் மாற்றம், பாடி லாங்கு வேஜில் மாற்றம் என டோட்டலாகவே மாறிய ராதிகாவை பார்த்து ஒட்டுமொத்த திரைத்துறை யினரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ராதிகாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் முக்கியமான படமாக இது அமையும் எனவும் ஆரூடம் கூறுகிறார்கள். இப்படி பல சிறப்பம்சங்களை சுமந்துகொண்டு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தில் திரைப்படமானது தியேட்டர்களில் ரிலீஸானது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. இந்தப் படத்தை ஒற்றைக் காலில் நின்று அந்நிறுவனம் வாங்கியதாக சிவா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராதிகாவுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் அந்த விருதுக்கே மதிப்பில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள்

Scroll to Top