மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்த பின்னர், அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு எப் பி ஐ மலேசியாவிலிருந்து ஒரு வங்காளதேச நாட்டவரை நாடு கடத்தியுள்ளது.
அனைத்துலக குழந்தை பாலியல் சுரண்டல் நிறுவனத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, 28 வயதான சோபைதுல் அமீன் 2022 முதல் தேடப்பட்டு வருவதாக எப்பிஐ இயக்குனர் காஷ் படேல் தெரிவித்தார்.
சோபைதுல் நேற்று அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு வந்ததாகவும், இன்று பின்னர் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சந்தேக நபரைக் கைது செய்ய உதவியதற்காக மலேசிய அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் படேல் நன்றி தெரிவித்தார்




