விஜய், சம்பந்தப்பட்ட ஒரு நடிகையோடு வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார். விஜய் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.” என்று பகிரங்கமாக தெரிவித்தார் விஜய் மனைவி சங்கீதா.
இந்த விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை திரிஷாவுடன் தவெக தலைவர் விஜய் ஒன்றாக வந்து பங்கேற்றார். இருவரும் ஒரே நிற பட்டு உடைகள் அணிந்து ஒரே காரில் வந்து திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றனர். இது தற்போது பேசுபொரு ளாகி வருகிறது.




