Vimarsagan Media

Home » World » விமான எரிபொருள் ஏற்றம் பயணக் கட்டணம் படும் வீக்கம்!

விமான எரிபொருள் ஏற்றம் பயணக் கட்டணம் படும் வீக்கம்!

ஆசிய விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. சில விமானச் சேவைகளை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவை சிந்தித்து வருகின் றன.மத்திய கிழக்கில் நீடிக்கும் சண்டையால் எரிபொருள் விலை உயர்ந்ததும் அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டதுமே இதற்குக் காரணம்.

இந்திய விமான நிறுவனங்கள் நீண்டதொலைவு விமானங்களுக்கான பயணக் கட்டணங்களை 15 விழுக்காடு வரை உயர்த்திவிட்டன. கட்டணத்தை மேலும் அதிகரிக்கவும் அவை திட்ட மிட்டுள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான எரிபொருளுக்கு இறக்கு மதியையே பெரிதும் நம்பியிருப்பதால் பயணக் கட்டணம் 70 விழுக்காடுவரை உயர்த்தப்படலாம் என்று வியட்னாம் அரசாங்க ஊடகம் எச்சரித்துள்ளது.

விமானப் பயணக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் கூறிய ஏர் நியூசிலாந்து, எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்தால் பயணக் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய அல்லது அமெரிக்க விமான நிறுவனங்களைப் போல, ஆசிய விமான நிறுவனங்கள் அதிக எண்ணெய் விலை உயர்வுக்கு எதிரான இழப்புக் காப்பு வணிக நடைமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. அதனால், விமான எரிபொருள் விலை திடீரென உயரும்போது அவை பாதிப்பிற்குள்ளா கும் நிலை ஏற்படுகிறது.

Scroll to Top