ஈரான் போர் அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டில் நிலைமையைச் சமாளிக்கச் சம்பள குறைப்பு, எரிபொருள் கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. போர் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதாக ஷெரீப் அறிவித்தார்.
ஈரான்- இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. 2வது வாரமாக மாறி மாறி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், அதன் பாதிப்பு அனைத்துலக அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சில அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார்.
நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அவர் பெரும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தார். அரசு வாகனங்களை இயக்கக்கூடாது என அறிவித்த அவர், அரசு தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களையும் ரத்து செய்தார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “அரசுத் துறை வாகனங்களுக்கான எரிபொருள் பயன்பாடு அடுத்த இரண்டு மாதங்களுக்கு 50% குறைக்கப்படும். இருப்பினும், ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகளுக்கு இந்த எரிபொருள் குறைப்பு பொருந்தாது. மேலும், 60% அரசு வாகனங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இயக்கப்படாது




